உலகிலேயே முதன் முதலில் பிரிட்டனில் பைசர் மற்றும் ஆஸ்ட்ராசெனகா போன்ற இரண்டு நிறுவனங்களின் தடுப்பூசியும் கலப்பது குறித்த ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.
பிரிட்டனில் பலவகைகளில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இதனால் கொரோனா வைரஸ் பரவலை முற்றிலுமாக விரைவாக கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய வழிமுறைகளை கண்டறிவதற்காக இந்த ஆராய்ச்சி நடைபெறுகிறது. மேலும் தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் தோன்றிய உருமாற்றமைடைந்த புதிய கொரோனா வைரஸ் தீவிரமாக பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இருப்பினும் உலகம் முழுவதும் உருமாற்றம் பெற்ற கொரனோ வைரஸ் சுமார் 4000 வகைகள் பரவி வருவதாக கூறப்பட்டுள்ளது. இதனால் பைசர் பயோ-பயோஎன்டெக் மற்றும் மாடெர்னா, ஆக்ஸ்போர்ட்-ஆஸ்ட்ராசெனகா போன்ற தடுப்பூசி மருந்து நிறுவனங்கள் தங்களது திறனை மேம்படுத்துவதற்கான பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.