உலகின் முதல் கொரோனா பாதித்த நோயாளியை ஆராய்ச்சிக்குழுவினர் தற்போது கண்டறிந்துள்ளனர்.
உலகில் முதல் கொரோனா பாதிப்பு இத்தாலியில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சீனாவின் வூஹான் நகரில் ஏற்படவில்லை என்று இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் குழு உறுதி செய்துள்ளது. அதாவது கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதம் முதல் சீனாவின் வூஹான் நகரம் மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் உலகில் உள்ள 11 மில்லியன் மக்கள் தொகையில் ஒரு நபரிடமிருந்து பரவிய கொரோனா உலக நாடுகள் முழுவதையும் மொத்தமாக அதிரவைத்த பெரும் தொற்றாக மாறியது என்றே கூறலாம்.
மேலும் தற்போது மிலன் பல்கலைக்கழகதினால் ஒன்றிணைந்த சர்வதேச ஆராய்ச்சி குழு, உலகின் முதல் கொரோனா நோயாளி 25 வயதுடைய இத்தாலியை சேர்ந்த இளம் பெண்ணாக இருக்கலாம் என்று உறுதி செய்துள்ளார்கள். அதாவது இந்த இளம் பெண் அவரின் தோள்களில் தடிப்புகள் ஏற்பட்டதால் கடந்த 2019ஆம் வருடத்தில் நவம்பர் மாதம் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் RNA வைரசின் மரபுவரிசைமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் கொரோனா தொடர்புடைய ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் முதல் கொரோனா நோயாளி இந்த பெண்ணாக இருக்க வாய்ப்புள்ளதாக மிலன் பல்கலைக்கழக ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
எனினும் இப்பெண்தான் முதல் நோயாளி என்பது குறித்து உறுதி செய்வதற்கான சாத்தியங்கள் இல்லை என்றும் கூறியுள்ளனர். எனினும் கடந்த 2019 ஆம் வருடம் அக்டோபர் மாதம் மற்றும் நவம்பர் மாதங்களில் கொரோனா தொற்று இத்தாலியில் இருந்திருக்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்றும் கூறியுள்ளனர். இதுமட்டுமன்றி கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் இத்தாலியிலுள்ள இரண்டு முக்கியமான நகரங்களில் கழிவுநீரில் இருந்து கொரோனா மாதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். மேலும் நவம்பர் மாதம் 2019 ஆம் வருடத்தில் இத்தாலியை சேர்ந்த சில மருத்துவர்கள் விசித்திரமான நிமோனியாவின் பரவலையும் கண்டுபிடித்ததாக தெரியவந்துள்ளது.