உலக நாடுகள் முழுவதிலும் ஒட்டுமொத்தமாக சுமார் 13 கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்படைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக நாடுகள் முழுவதும் கொரோனா ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் உலகத்தில் உள்ள மொத்த நாடுகளிலும் கொரோனாவால் சுமார் 13 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் கொரோனா பாதித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை சுமார் 28.39 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது.
இதில் தற்போதுவரை சுமார் 10.48 கோடி மக்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களில் சுமார் 2.24 கோடிக்கு மேற்பட்ட மக்கள் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். மேலும் சிகிச்சையில் இருக்கும் நபர்களில் சுமார் 96,700 க்கும் அதிகமான நபர்களின் நிலை மோசமாக உள்ளது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்நிலையில் கொரோனா மிகத்தீவிரமாக பரவி வரும் நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் முதல் ஐந்து இடங்களில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, பிரான்ஸ், ரஷ்யா போன்ற நாடுகள் உள்ளன.