உலகிலேயே வெளிநாட்டவர்கள் வாழ்வதற்கு அதிக செலவு பிடிக்கும் நகரங்களின் 2022 ஆம் வருடத்துக்கான பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அப்பட்டியலில் சுவிஸ் நகரங்கள் 4 இடம்பெற்றுள்ளது. அதாவது பட்டியலில் தொடர்ச்சியாக முதலிடம் பெற்று வரும் ஹொங்ஹொங்கைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்தின் சூரிச், ஜெனீவா, பேசல் மற்றும் Bern ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த நான்கு இடங்களைப் பெற்றுள்ளது.
இச்செய்தியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ள விடயம் என்னவெனில், உலகின் அதிக விலைவாசியுள்ள நகரங்களான சூரிச்சும் ஜெனீவாவும், உலகில் வாழச்சிறந்த நாடுகள் பட்டியலிலும், முதல் 5 இடங்களுக்குள்ளும் இடம்பிடித்துள்ளது தான். அதே சமயத்தில் விலைவாசியின் அடிப்படையில் குறைந்த விலைவாசியுள்ள நகரங்களில், கூடவே உயர்ந்த வாழ்க்கைத் தரமும் கொண்ட நகரங்களாக, கனடாவின் வான்கூவரும் ரொரன்றோவும், ஜேர்மனியின் பிராங்க்பர்ட்டும், ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமும் பெயர்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.