நார்வே:
நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு என்ற பெயர் நார்வேக்கு உண்டு. ஒரு நாளைக்கு சுமார் 20 மணி நேரம் இங்கு சூரியன் காணப்படும். அதாவது 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் சூரியன் மறையாமல் இருக்கும். மே மாதத்திலிருந்து ஜூலை மாதம் வரையிலான சுமார் 70 நாட்கள் இப்படியே இருக்கும்.
ஐஸ்லாந்து:
ஐரோப்பாவின் இரண்டாவது மிகப்பெரிய தீவு இது. இங்கு மே மாதம் முதல் ஜூன் மாதம் வரை இரவை பார்க்கவே முடியாது. ஏனெனில் சூரியன் எல்லா நேரத்திலும் காணப்படும். இங்கு நடுஇரவு சூரிய வெளிச்சத்தில் குதிரை சவாரியும், கோல்ப் விளையாட்டு விளையாடுவது வழக்கம் .
கனடா :
வட அமெரிக்க கண்டங்களில் இரண்டாவது பெரிய நாடு கனடா. கனடாவில் கோடை காலத்தில் தொடர்ச்சியாக 50 நாட்களுக்கு சூரிய ஒளி காணப்படும். கோடைகாலத்தில் இரவு சூரிய வெளிச்சத்தில் மீன் பிடிப்பது மற்றும் வேட்டையாடுவது இங்குள்ள மக்களுக்கு மிகவும் பிடித்த ஒரு பொழுதுபோக்கு.
ஸ்வீடன்:
ஸ்வீடனில் மே மாதத்தின் தொடக்கத்தில் இருந்து ஆகஸ்ட் மாதத்தின் பிற்பகுதி வரை சூரியன் நள்ளிரவு வரை காணப்படும். பின்னர் அதிகாலை 4 மணிக்கு மீண்டும் சூரியன் உதயமாகி விடும். குறைந்தது இரண்டு மணி நேரம் மட்டுமே இங்கு இரவு இருக்கும்.
பின்லாந்து :
பூலோகத்தின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் நாடு. உலகிலேயே சுத்தமான காற்று வீசப்படும் நாடு. வட துருவத்தில் அமைந்துள்ள நாடு என பல சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த நாட்டில் மே ஜூன் மாதங்களில் சூரியன் மறைவதில்லை. இந்த இரண்டு மாதங்களிலும் இரவு நேரத்தில் சூரியன் வெளிச்சத்தில் படகுசவாரி, மீன்பிடிப்பது போன்றவற்றில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.