Categories
பல்சுவை

“உலகைக் காட்டும் கண்கள்” பலரும் அறியாத வியக்கத்தக்க உண்மைகள்…!!!

நாம் அனைவரும் அறியாத மனித கண்களில் இருக்கின்ற திறன்கள் மற்றும் அது பற்றி பல வியக்கத்தக்க உண்மைகளை காணலாம் வாருங்கள்.

  • மனித கண்கள் பல வகையான ஒரு கோடி நிறங்களை வேறுபடுத்தி காண்கின்ற தன்மையைக் கொண்டுள்ளது. கண்களின் மெகாபிக்சல் 576 என்ற அளவில் இருக்கக்கூடும்.
  • அதிலும் சில பெண்களிடம் காணப்படுகின்ற மரபணு பிறழ்வு காரணத்தால், மற்றவர்களைவிட பத்துலட்சம் கூடுதலான நிறங்களை அவர்களால் காண இயலும்.
  • நீல நிற கண்களை கொண்டிருக்கின்ற மக்கள் அதிக அளவிலான ஆல்ககால் போதையை தாங்கும் திறன் கொண்டவர்கள்.
  • நாம் தினமும் தூங்கி எழுகின்ற நேரத்தில்,10 சதவீத நேரத்தை கண்மூடிய நிலையில், கண்களை இணைத்துக்கொண்டு கழித்து வருகிறோம்.
  • கண்களை கண்டு ஒரு விடயம் அறியும் தன்மையை மனிதர்கள் மற்றும் நாய்கள் மட்டுமே கொண்டுள்ளன. அதிலும் குறிப்பாக நாய்கள் மனிதர்களின் கண்களைப் பார்த்தே அதனை அறிந்து கொள்ளும் தன்மையைக் கொண்டுள்ளது.

  • நாம் தும்பும் போது கண்களைத் திறந்து கொண்டு தும்ம முடியாது. கண்களில் ஒளி படுவதை உணர்வதற்கு, மூளைக்கு வெறும் 0.2 நொடிகள் மட்டுமே தேவைப்படுகின்றது.
  • உலக அளவிலான மக்கள் தொகையில் 2% பேர் மட்டுமே பச்சை நிற கண்களை உடையவர்கள். அதிலும் குறிப்பாக மற்ற நிற கண்களை ஒப்பிடும் போது நீல நிற கண்கள் ஒளிக்கு மிகவும் சென்சிடிவ் ஆக செயல்படும்.
  • அமெரிக்காவில் 20 ஆம் நூற்றாண்டில் இருந்த மக்களில் பாதிப் பேர் நீல நிற கண்களை உடையவர்களாக இருந்துள்ளார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஆறிலொரு பேர் மட்டுமே நீல நிற கண்களை கொண்டுள்ளனர்.

Categories

Tech |