Categories
உலக செய்திகள்

உலகையே காப்பாற்றும் இந்தியா…! புகழ்ந்து தள்ளும் அமெரிக்க மருத்துவர்கள்…!!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்துகளான கோவிஷில்டு மற்றும் கோவக்ஸின் உலக நாடுகளுக்கு கொடுத்து உதவி வருவதை அமெரிக்க விஞ்ஞானி டாக்டர் பீட்டர் ஹோடஸ்  பாராட்டியுள்ளார்.

இந்தியா மட்டுமில்லாமல் உலக நாடுகள் அனைத்திலும் அதிகளவில் பரவி வரும் கொரோனா வைரஸை தடுப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்துகளை உலக நாடுகளுக்கு இந்தியா வழங்கி வருவதால் உலகையே காப்பாற்றி வருவதாகவும். உலகிற்கு தடுப்பு மருந்துகளை வழங்குவதால் உலகின் மருத்துவ மையமாகவும் திகழ்கிறது என அமெரிக்க விஞ்ஞானி டாக்டர் பீட்டர் ஹோடெஸ் பாராட்டியுள்ளார்.

கொரோனாவை எதிர்த்து போராடுவதில் இந்தியா அதிக பங்களிப்பு அளிப்பதாகவும். இந்திய தடுப்பு மருந்து தான் இப்போது உலகையே காப்பாற்றி வருவதாகவும். அதை நாம் அனைவரும் குறைத்து மதிப்பிட கூடாது அது தவறு என்றும் இந்திய அமெரிக்கா வர்த்தக கழகம் மூலம் காணொளியில் கிரேட்டர் ஹூஸ்டனில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் அமெரிக்க விஞ்ஞானி பீட்டர் ஹொடெஸ் கூறியுள்ளார். இவர் ஹோஸ்டன் பெயர் மருத்துவ கல்லூரியில் டீன் ஆகவும் உலகப் புகழ்பெற்ற மருத்துவ விஞ்ஞானியும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |