Categories
உலக செய்திகள்

உலக அமைதியை சீர்குலைப்பதே அமெரிக்காவின் நோக்கம்…. ரஷ்ய அதிபர் புதினின் பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

ரஷ்ய அதிபர் புதின் அமெரிக்காவை கடுமையாக சாடியுள்ளார்.

ரஷ்ய நாட்டின் அதிபர் புதின் உலகில் பல்வேறு நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதற்கு காரணம் அமெரிக்கா என்று கடுமையாக சாடியுள்ளார். அதாவது உக்ரைனில் நிலவும் போர் பதற்றத்திற்கு அமெரிக்காவே காரணம் என்று கூறியுள்ளார். அதன் பிறகு சீனா மற்றும் தைவானுக்கு இடையே பிரச்சனை இருப்பது தெரிந்தும் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் நாட்டுக்கு சென்றதால் தற்போது பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகரின் தைவான் பயணம் சீனாவுடன் போர் பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோன்று ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் போன்ற பகுதிகளிலும் போர் பதற்றத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. மேலும் உலக அமைதியை சீர்குலைத்து, பிற பகுதிகளில் குழப்பமான சூழ்நிலையை உருவாக்குவதே அமெரிக்காவின் நோக்கமாகும் என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |