உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ் கண்டில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு துறை மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்ற மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜநாத் சிங் பங்கேற்று உரை நிகழ்த்தியுள்ளார். அப்போது அவர் பேசியதாவது, உலக அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு எதிராக தீவிரவாதம் மிகப்பெரும் சவாலாக உள்ளது. தீவிரவாதத்தை அனைத்து வழிகளிலும் கலந்து பிராந்தியத்தில் அமைதி பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை நிலவ செய்ய இந்தியா உறுதி அளித்திருக்கிறது. மேலும் தீவிரவாதிகளின் புகலிடமாக ஆப்கன் பிராந்தியத்தை பயன்படுத்த அனுமதிக்க கூடாது ஆப்கானிஸ்தானில் அமைதி பாதுகாப்பு மற்றும் ஸ்திரதன்மை நிலவ இந்தியா ஆதரவளிக்கின்றது.
பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தேசிய அளவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் அனைத்து வழிகளிலும் தீவிரவாதத்தை ஒழிப்பதில் ஷாங்காய் ஒத்துழைப்பு மற்றும் அமைதி நாடுகள் ஒருங்கிணைந்து போராட வேண்டும். ரஷ்யா உக்ரைன் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு இந்தியா ஆதரவளிக்கிறது. மேலும் அங்கு மனிதநேய உதவி அளிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கின்ற ஐநா பொதுச் செயலாளர் ஐநா அமைப்புகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் போன்றவற்றிற்கு இந்தியா ஆதரவளிக்கிறது என அவர் கூறியுள்ளார். முன்னதாக தாஷ் கண்டில் அமைக்கப்பட்டிருக்கின்ற இந்தியாவின் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் சிலைக்கு ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தியுள்ளார். அவரது எளிமை மற்றும் நேர்மைக்காக மறைவுக்குப் பின் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.