Categories
உலக செய்திகள்

உலக அளவில் அதிகரிக்கும் கொரோனா… WHO கவலை…!!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருவதாக சுகாதார நிறுவன தலைமை இயக்குனர் கவலை தெரிவித்துள்ளார்.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு யாரும் செல்லாத வகையில் போக்குவரத்து சேவை முடக்கப்பட்டது. கொரோனாவால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில்உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில் பெரும்பாலான நாடுகளில் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

சில நாடுகளில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் உலகம் முழுவதும் 2021 இன் முதல் இரண்டு மாதங்களில் குறைந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருவதாக சுகாதார நிறுவன தலைமை இயக்குனர் டெட்ரோஸ் அதனோம் கவலை தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் எடுத்தும் மரபான மாற்றங்களும், கட்டுப்பாடுகளை கைவிட்டதும், போதிய அளவில் தடுப்பூசி இல்லாததுமே இதற்கு காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |