சீனாவில் அரசியல் பொருளாதாரம் ஆதிக்கம் கடந்த பத்து வருடங்களில் பல மடங்காக அதிகரித்துள்ளது. இதற்கு காரணமானவர் இந்த நாட்டின் அதிபர் ஜின்பிங் இவர் கடந்த 2013 ஆம் வருடம் சீனாவின் அதிபராக பொறுப்பேற்றுள்ளார். அதனை தொடர்ந்து நாட்டின் முன்னேற்றத்திற்காக பல்வேறு புதிய சட்டதிட்டங்களையும் பல்வேறு துறைகளில் மாற்றங்களையும் கொண்டு வந்து சீனாவை கட்டமைத்துள்ளார். இவரது ஆட்சியில் சீனப் பொருளாதாரம் அசுர வளர்ச்சி கண்டுள்ளது இதனை அடுத்து கடந்த 2018 ஆம் வருடம் நடைபெற்ற ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி உச்சி மாநாட்டில் ஜின் பின் இரண்டாவது முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சீன அரசியலமைப்பு சட்டத்தின்படி ஒருவர் தொடர்ந்து இரண்டு முறை மட்டுமே அதிபராக இருக்க முடியும் என்ற வரம்பு இருந்து வந்தது.
ஆனால் ஜின்பிங் இரண்டாவது முறையாக அதிபராக பதவி ஏற்ற அதே வருடம் அதிபர் பதவிக்கான 10 வருட காலவரம்பு சட்டபூர்வமாக நீக்கப்பட்டு அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஜின்பிங் கை 3வது முறையாக அதிபர் பதவியில் தொடர வழிவகுக்கும் தீர்மானம் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர் அதிகாரம் படைத்த மத்திய குழுவால் நிறை வேற்றப்பட்டுள்ளது. ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உச்சி மாநாட்டில் ஜின்பிங் மூன்றாவது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அப்போதிலிருந்தே இந்த மாநாட்டின் மீதான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது இந்த சூழலில் அத்தகைய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உச்சி மாநாடு நேற்று தொடங்கியுள்ளது.
இந்த மாநாட்டை சீன அதிபர் ஜின் பின் தொடங்கி வைத்துள்ளார் தற்போது 69 வயதாகும் ஜின் பின் தனது ஆயுள் காலம் முழுவதும் சீனாவின் அதிபராக நீட்டிக்கப்படும் என கூறப்படுகிறது. இதற்கிடையே மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றிய ஜின் பின் ஹாங்காங் மற்றும் தைவான் விவகாரம் கொரோனா தொற்றை ஒழிக்கும் கொள்கை போன்ற பல்வேறு விவகாரங்கள் பற்றி பேசி உள்ளார். சுமார் 45 நிமிடம் நீடித்து அவரது உரையின் முக்கிய அம்சங்கள் ஆவது ஹாங்காங்கில் நிலைமை முற்றிலுமாக மாறி உள்ளது வெறும் குழப்பத்தில் மட்டும் இருந்த ஹாங்காங் பெரிய மாறுதலை சந்தித்திருக்கிறது. தற்போது அது சீன அரசின் ஒரு பகுதியாக இருக்கிறது.
அதேபோல் தைவான் பிரச்சனையில் பிரிவினைவாதிகளை முறியடித்து நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை வீழ்த்துவதில் சீனா உறுதியாக இருக்கிறது. தைவனை சீனாவுடன் ஒருங்கிணைப்பதில் நாங்கள் அமைதியான வழியில் செல்வோம் இருப்பினும் தேவைப்பட்டால் படை பலத்தை பயன்படுத்த ஒருபோதும் தயங்க மாட்டோம் கொரோனா கட்டுப்பாடுகளை பொருத்தவரையில் சீனாவின் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கை பெரும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. மேலும் சீனாவை பொருத்தவரை மக்களும் அவர்களின் உயிரும் நலம்தான் முதலில் முக்கியத்துவம் வாய்ந்தது கொரோனா காலத்தில் மக்களின் உடல் நலனை சிறப்பாக பேணியது பெருந்தொற்று கட்டுப்படுத்துவதில் சீனா சிறப்பாக செயல்பட்டிருக்கிறது உலக தரம் வாய்ந்த ராணுவத்தை கட்டமைப்பதில் சீனா எப்போதும் அதிக கவனம் செலுத்தி வரும் என அவர் தெரிவித்துள்ளார்.