உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கை இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
சர்வதேச அளவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 லட்சத்து 38 ஆயிரத்து 779 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத தினசரி அதிகபட்ச எண்ணிக்கை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் தினசரி நோய் தொற்று எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருவதே இதற்கு காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதற்கு முன்னர் கடந்த 2ஆம் தேதி அன்று உலக அளவில் அதிக பட்சமாக கொரோனா தொற்று பதிவு செய்யப்பட்டது. அதே நாளில் மட்டும் 3 லட்சத்து 30 ஆயிரத்து 340 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. உலக நாடுகளிலேயே இந்தியா, அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளில் தான் மிக அதிக எண்ணிக்கையிலான தினசரி கொரோனா நோய் தொற்று பதிவு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.