Categories
தேசிய செய்திகள்

உலக அளவில் கொரோனாவும் குணமடைந்தவர்கள் பட்டியல்… இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய இந்தியா…!!!

உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த அவர்களின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

உலக அளவில் குறையும் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா மற்றும் பிரேசிலை தொடர்ந்து இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கின்றது. அதே சமயத்தில் தொற்று விரைவில் கண்டறியப்பட்டு, மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு, விரைவில் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள் இன் எண்ணிக்கையில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகின்றது. உலக அளவில் ஒப்பிடும் போது குணமடைந்தவர்கள் பட்டியலில் பிரேசில் முதலிடத்தில் இருக்கின்றது. அந்நாட்டில் 32.26 லட்சம் பேர் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி உள்ள நிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய வர்களின் எண்ணிக்கை 26.16 லட்சமாக இருக்கின்றது. பிரேசிலை தொடர்ந்து இந்தியா இரண்டாவது இடம் வகித்துக் கொண்டிருக்கிறது.

இந்தியாவின் நேற்றைய நிலவரத்தின் படி, கொரோனாவிற்கு 25.25 லட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர். மேலும் 18 லட்சத்து 8 ஆயிரத்து 936 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர். இந்தியாவை தொடர்ந்து அமெரிக்கா மரணம் அடைந்தவர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கின்றது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 57,381 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதனால் இந்தியாவில் கொரோனா குணம் அடைந்தவர்களின் விகிதம் 71.61% ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1.94 சதவீதமாக குறைந்து இருப்பது உலக நாடுகளின் கவனத்தை கவரும் வகையில் அமைந்திருக்கிறது.

 

Categories

Tech |