கொரோனாவை தொடர்ந்து பொருளாதார நெருக்கடி இலங்கையை பாதித்திருப்பதால் நாட்டின் சுற்றுலாத்துறை வெகுவாக பாதித்திருக்கிறது. இதனால் சர்வதேச சுற்றுலா பயணிகளை ஈர்த்து அந்த துறையை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரம் காட்டி வருகின்றது. இந்த சூழலில் உலக அளவில் சுற்றுலாவிற்கு ஏற்ற பாதுகாப்பான நாடுகள் பட்டியலை வேர்ல்டு டு பேக்கர்ஸ் இணையதளம் வெளியிட்டு இருக்கிறது இதில் பயணம் செய்வதற்கு பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னணி இடத்தை அது அதிலும் குறிப்பாக 12 இடங்களில் இலங்கையையும் அந்த இணையதளம் சேர்த்திருக்கிறது.
இலங்கையின் பெரும்பான்மையான கலாச்சாரம் பௌத்தமாக இருக்கின்ற நிலையில் அவர்களின் பழக்க வழக்கங்கள் அமைதியாகவும் வரவேற்கத்தக்கதாகவும் இருப்பதால் பயணம் மேற்கொள்வதற்கு இது மிகவும் பாதுகாப்பான இடமாக அமைகிறது என அந்த இணையதளம் குறிப்பிட்டு இருக்கிறது. மேலும் இது இலங்கை சுற்றுலாத்துறைக்கு பெரும் உந்து சக்தியாக அமைந்திருக்கிறது. அந்த இணையதளத்தின் வரிசைப்படுத்தலை சுட்டிக்காட்டி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு சுற்றுலாத் துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.