Categories
உலக செய்திகள்

உலக அளவில்… பிரதமர் மோடிக்கு 7ஆம் இடம்…!!!

உலக அளவில் ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட நபர்களின் பட்டியலில் பிரதமர் மோடி 7வது இடத்தை பிடித்து இருப்பது பெருமைக்குரியது.

ஒவ்வொரு வருடமும் சமூக வலைத்தளமான ட்விட்டரில் அதிக லைக்ஸ், ரீட்வீட், அதிகம் பேசப்பட்டு வருகின்ற விஷயங்கள் என்ன என்பது குறித்து சர்வே எடுப்பது வழக்கம். அதன்படி இந்த வருடம் நடிகர் விஜய் செல்பி படம் ஒன்றை அதிக அளவில்  டுவிட் செய்யப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் தொடக்கத்தில் மாஸ்டர் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்தது. அதில் கலந்து கொண்ட விஜய், தனது ரசிகர்களுடன் செல்பி படம் ஒன்றை எடுத்தார். அதனை தனது ட்விட்டரில் பகிர்ந்தார். அந்த செல்பி படம் இந்த வருடம் ட்விட்டரில் அதிக அளவு பகிரப்பட்ட படமாக முதலிடத்தை பிடித்துள்ளது.

இதனையடுத்து உலக அளவில் ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட நபர்களின் பட்டியலில் பிரதமர் மோடி 7வது இடத்தைப் பிடித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முதல் இடத்திலும், ஜோ பைடன் 2ஆம் இடத்திலும் உள்ளனர். அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பராக் ஒபாமா 5வது இடத்திலும், எலன் மஸ்க் 9 வது இடத்திலும் உள்ளனர். முதல் 10 இடங்களில் இடம்பெற்ற ஒரே பெண்ணாக கமலா ஹாரிஸ் உள்ளார். ஆனால் எதற்காக அதிகம் பேசப்பட்டவர் என்ற தகவலை ட்விட்டர் வெளியிடவில்லை.

Categories

Tech |