உலகில் அதிக கண்காணிப்பு கேமராவை நிறுவியுள்ள முதல் நகரமாக டெல்லி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
தங்கள் மாநிலத்தின் மீது அதீத கவனம் செலுத்தும் 20 நகரங்களின் பட்டியலை போர்ப்ஸ் இந்தியா வெளியிட்டது. இதில் ஒரு சதுர மைல் பரப்பில் நிறுவப்பட்ட சிசிடிவி கேமராக்களை அடிப்படையாகக்கொண்டு அதிக கண்காணிப்பு உள்ள நகரங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதன்படி உலக அளவில் அதிக கண்காணிப்பு கேமராக்களை நிறுவியுள்ள முதல் நகரமாக இந்தியாவின் தலைநகர் டெல்லி தேர்வு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் 1சதுரம் மையிலுக்கு 1,827 கேமராக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது.
இரண்டாவது இடத்தை இங்கிலாந்தின் தலைநகர் லண்டன் பெற்றிருக்கின்றது. இந்த பட்டியலில் தமிழகத்தின் தலைநகர் சென்னை மூன்றாவது இடத்தை பிடித்திருப்பது. சென்னையில் ஒரு சதுர மைலுக்கு 610 கேமராக்கள் உள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மிகக் குறுகிய காலத்தில் இதை அடைந்த அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.