Categories
உலக செய்திகள்

“உலக அளவில் முடங்கி இன்ஸ்டாகிராம் சேவை”… தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டது… மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!!!

உலக அளவில் முடங்கிய இன்ஸ்டாகிராம் சேவை சரி செய்யப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இளைஞர்களிடையே மிகப் பிரபலமான சமூக வலைதளங்களில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் விளங்கி வருகிறது இந்த இன்ஸ்டாகிராம் நேற்று உலக அளவில் திடீரென முடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து அதனை பயன்படுத்த முடியவில்லை என ட்விட்டர் போன்ற பிற சமூக வலைதளங்களில் பயனர்கள் பலர் புகார் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து இன்ஸ்டாகிராம் பயனர்கள் பலரும் தங்களது கணக்குகள் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்ய ப்பட்டதாக தங்களுக்கு செய்தி வந்ததாக நேற்று புகார் அளித்துள்ளனர். மேலும் சிலர் தங்களது கணக்குகளில் பாலோவர்ஸ் எண்ணிக்கை பெரிதும் குறைந்து வருவதாகவும் பெரிய வீழ்ச்சியை காட்டுவதாகவும் கூறியுள்ளனர்.

இந்த சூழலில் இந்த புகார் பற்றி இன்ஸ்டாகிராம் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும் இது பற்றி இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ள twitter பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, உங்களில் சிலருக்கு உங்களின் இன்ஸ்டாகிராம் கணக்கை அணுகுவதில் சிக்கல் இருப்பதை நாங்கள் அறிகின்றோம். அதை நாங்கள் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம் சிரமத்திற்காக வருந்துகிறோம் என கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே உலக அளவில் ஏறத்தாழ 8 மணி நேரம் முடங்கி இன்ஸ்டாகிராம் சேவை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதாக அதன் உரிமையாளரான மெட்டா நிறுவனம் தகவல் தெரிவித்திருக்கிறது.

மேலும் இது பற்றி இன்ஸ்டாகிராம் பதிவில் உலகெங்கிலும் உள்ள இன்ஸ்டாகிராம் பயனர்கள் தங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கை அணுகுவதில் சிக்கல் உள்ளது. சில instagram கணக்கில் தங்களை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை தற்காலிகமாக மாறுதல் அடைந்திருக்கலாம். தொழில்நுட்பக் கோளாறு தான் இதற்கு காரணம் அதை சரி செய்து விட்டோம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |