மக்கள் வசிப்பதற்கு உலக அளவில் சிறந்த நகரமாக ஆஸ்திரியா தலைநகரான வியன்னா தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து பொருளாதார புலனாய்வு பிரிவு நடத்திய சிறப்பு ஆய்வில் மக்கள் வசிப்பதற்கு சிறந்த நகரங்களாக தேர்வு செய்யப்பட்ட முதல் 10 நகரங்களில் ஐரோப்பாவைச் சேர்ந்த 6 நகரங்கள் இடம்பெற்றுள்ளது.
அதாவது ஸ்திரத்தன்மை, சிறந்த உள்கட்டமைப்பு, சுகாதாரம், கலாச்சாரம் மற்றும் பொழுதுபோக்குக்கான அம்சங்களை கொண்டு இந்நகரங்கள் பட்டியலிடப்படுகிறது. முதல் 10 இடங்களுக்குள் வழக்கமாக இடம் பிடிக்கும் ஆக்லாந்து கொரோனா ஊரடங்கு காரணமாக இப்பட்டியலில் 34வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது.
கோப்பன்ஹேகன், ஸூரிக், ஜெனீவா , பிராங்க்ஃபர்ட் , ஆம்ஸ்டர்டாம் போன்ற ஐரோப்பிய நகரங்கள் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்று இருக்கிறது. இந்த பட்டியலில் லண்டன் 33வது இடத்திலும் ஸ்பெயினின் பார்சிலோனா மற்றும் மாட்ரிட் முறையே 35 மற்றும் 43-வது இடத்தையும் பிடித்துள்ளது. இத்தாலியின் மிலன் 49-வது இடத்திலும், அமெரிக்காவின் நியூயார்க் நகரம் 51-வது இடத்திலும், சீனாவின் பெய்ஜிங் 71வது இடத்திலும் இருக்கின்றன.