அமெரிக்க விசா பெறுவதில் உலக அளவில் இந்தியா முன்னேறி வருவதாக அமெரிக்க தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க விசா பெறுவதில் உலக அளவில் மெக்சிகோ முதல் இடத்தை பிடித்து வருகிறது. அதற்கு அடுத்தபடியாக அமெரிக்க விசா பெறுவதில் இந்தியா முன்னேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பற்றி அமெரிக்க தூதரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் பேசும் போது, அமெரிக்க விசா பெறுவதில் அடுத்த வருடத்திற்குள் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை அடுத்து இந்தியா தான் விசா வழங்குவதில் அமெரிக்காவிற்கு முதல் இடத்தில் இருக்கிறது. இதில் மாணவர்கள், உயர் தொழில்நுட்ப பணியாளர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் வணிகம் போன்ற பிரிவுகள் உள்ளது. இதனை அடுத்து விசாக்களுக்கு விண்ணப்பித்திருந்த இந்தியர்களுக்கான அடுத்த கட்டமாக விசாகளுக்கு விண்ணப்பிதிருந்த இந்தியர்களுக்கு இந்த மாதம் அப்பாயின்மெண்டுகள் வெளியிடப்படும் என அமெரிக்க தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் மட்டும் இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் ஹெச்-எல் விசாகளுக்கு விண்ணப்பிதிருந்த இந்தியர்களுக்கு ஒரு லட்சசதிற்கும் அதிகமான அப்பாயின்மென்டுகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கதாகும்.