உலக மகளிர் தினத்தன்று உலக சுகாதார அமைப்பானது பெண்கள் பற்றி வெளியிட்ட அறிக்கையானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உலக சுகாதார அமைப்பானது பெண்களைப் பற்றி ஆய்வு நடத்தி உள்ளது. இதில் உலக அளவில் 736 மில்லியன் கணக்கில் பெண்கள் உள்ளனர். இந்தப் பெண்கள் பாலியல் தொந்தரவால் பாதிக்கப்படுவதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. எனவே உலக சுகாதார அமைப்பின் ஆய்வை முதன்மையாகக் கொண்டு கணக்கிடப்பட்டது உலகிலுள்ள 15 முதல் 24 வயதிற்கு உட்பட்ட நான்கில் ஒரு பங்கு பெண்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆண்கள் பெண்களை பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்குவதில் பெரும்பாலும் பெண்களுக்கு நெருக்கமாக உள்ள ஆண்கள் மூலமாக வன்கொடுமை நடைபெறுகிறது. இதனால் சர்வதேச அளவில் பெண்கள் தங்களின் 15 வயதிலிருந்து பாலியல் தொல்லைக்கு ஆள் ஆக்கப்படுவதாக கூறியுள்ளனர். அதுமட்டுமல்லாது போன்ற நாடுகளில் பாலியல் வன்கொடுமைகள் அதிக அளவில் நிகழ்வதாக இந்த ஆய்வு நடத்தியது தெரிந்துள்ளது. இதில் பாதி பெண்கள் வசதியில்லாத மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்களும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
பாலியல் வன்கொடுமையால் பாதிப்படையும் பெண்களுக்கு உரிய நிவாரணம் கிடைப்பதற்காக உலக சுகாதார அமைப்பானது, சிவில் சமூக அமைப்புகளுடன் ஐநா நாடுகளும் இணைந்து செயல்படுமாறு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக 2030ஆம் ஆண்டிற்குள் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகளை அளிக்க அனைத்து உலக நாடுகளும் இதற்கான முயற்சியை ஈடுபட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியது.