உலக ஆணழகன் போட்டியில் கலந்து கொள்ளும் தலைமை காவலரை நேரில் அழைத்து சென்னை காவல் ஆணையர் ஊக்கத்தொகை வழங்கியுள்ளார்.
சென்னை அடையாறு போக்குவரத்து காவல் துறை அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் புருசோத்தமன் இவர் கடந்த 2000ம் ஆண்டு முதல் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று இதுவரை 8 முறை மிஸ்டர் தமிழ்நாடு என்ற பட்டத்தை வென்றுள்ளார். காவல்துறையினருக்கான அகில இந்திய போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
இந்நிலையில் இவர் வருகிற அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை உஸ்பெகிஸ்தான் நாட்டில் உள்ள தாஷ்கண்ட்டில் நடைபெறும் உலக ஆணழகன் போட்டியில் கலந்து கொள்ள போகிறார். இந்த செய்தியை கேள்விப்பட்ட சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், புருஷோத்தமனை நேரில் அழைத்து அவர் அந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத் தொகையையும் வழங்கியுள்ளார்.