Categories
பல்சுவை

“உலக கண் பார்வை தினம்” ஆரோக்கியமான கண்கள்…. இது செய்தால் சாத்தியம்….!!

நம் கண்களை பாதுகாப்பதற்கு தேவையான சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருள்கள் மற்றும் அவற்றின் பயன்கள் ஆகியவற்றை அனைவரும் தெரிந்து கொள்ளலாம்.

வைட்டமின் ‘சி’ – இந்த சத்து நிறைந்த உணவுப் பொருள்களாக நெல்லிக்காய், பப்பாளி, எலுமிச்சை, மிளகாய், கொய்யாப்பழம், கீரைகள், ஆரஞ்சு நிறப் பழங்கள், தக்காளி மற்றும் பெரிய வகை பழங்கள் ஆகியவை கருதப்படுகின்றன. இவற்றை தினந்தோறும் 40 மில்லி கிராம் எடுத்துக்கொள்ளலாம். அதனால் கண் புரையை தடுக்க இயலும். கண்ணில் இருக்கின்ற இணைப்பு திசைகளுக்கு சக்தி அளிப்பது மட்டுமன்றி சீரான ரத்த ஓட்டத்திற்கும் இது உதவுகிறது.

வைட்டமின் ‘ஏ’ – இந்த வைட்டமின் சத்து ஜாதிக்காய், கேரட், பச்சைக் காய்கறிகள், பப்பாளி, தக்காளி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, குடைமிளகாய், சிறிய மீன்கள் மற்றும் ஆட்டு ஈரல் ஆகிய உணவுகளில் நிறைந்துள்ளது. இதனை 500 மைக்ரோகிராம் எடுத்துக் கொள்வதன் மூலம் ஒளி ஆற்றலை நரம்பு தூண்டுதல் மூலம் விழித்திரைக்கு எடுத்து செல்லும். மேலும் பார்வை நிறமிகளை உருவாக்குவது மட்டுமன்றி மாலைக்கண் நோய் வராமல் தடுக்கும்.

வைட்டமின் ‘ஈ’ – இந்த வைட்டமின் சத்து லியூட்டின் மற்றும் ஜீசான்தின் ஆகியவற்றுடன் ஒன்றாக இணைந்து கண்புரை தோன்றுவதை தடுக்க உதவுகிறது. முக்கிய கொழுப்பு அமிலங்களுடன் ஒன்றிணைந்து நம் கண்களை பாதுகாக்கிறது. மேலும் பாதாம், செறிவூட்டப்பட்ட தானியங்கள், கடல் உணவுகள், சூரியகாந்தி விதை, எண்ணெய் வித்துக்கள் மற்றும் கிவி பழம் ஆகியவற்றை 22 ui எடுத்துக் கொண்டால் வைட்டமின் ஈ சத்து அதிகரிக்கும்.

துத்தநாகம் – இது கல்லீரலில் சேமிக்கப்படும் வைட்டமின் ஏ சத்து ரத்தத்தில் ஒன்றாக கலந்து ரெடினால் என்ற பொருள் ரெடினாயிக் என்ற அமிலமாக மாறுகிறது. கடல் உணவுகள், ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி, ப்ரோக்கோலி, பரங்கி விதை, பீன்ஸ் மற்றும் காளான் ஆகிய உணவுகளில் இந்த சத்து நிறைந்துள்ளது. இதனை 15 மில்லி கிராம் எடுத்துக் கொண்டால் துத்தநாக சத்து அதிகரிக்கும்.

 

செலினியம் – இது ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதன் மூலம் கண்களில் ஏற்படும் செல் சிதைவை முற்றிலும் தடுத்து நிறுத்துகிறது. மேலும் முளைகட்டிய கோதுமை, ஈஸ்ட், வால்நட், கொட்டை உணவுகள்,மீன்கள், முட்டை மற்றும் பசலைக் கீரை ஆகியவற்றில் 55 மைக்ரோ கிராம் எடுத்துக் கொண்டால் செலினியம் சத்து அதிகரிக்கும்.

லியூடின் மற்றும் ஜீசான்தின் – இது விழித்திரையில் ஏற்படும் தேய்மானம் மற்றும் வறட்சியை தடுக்க உதவுகிறது. அதுமட்டுமன்றி கண்புரை வராமல் தடுப்பதற்கு இது பெரிதும் உதவுகிறது. பசலைக்கீரை, மிளகாய்,ப்ரோக்கோலி மற்றும் முட்டை ஆகிய உணவுகளில் இந்த சத்து அதிகம் இருப்பதால் அதனை தினம் தோறும் 10 மி.கிராம் மற்றும் 2 மி.கிராம் எடுத்துக் கொள்வது நல்லது.

ஒமேகா 3 மற்றும் 6 – இந்த கொழுப்பு அமிலங்கள் கண் பார்வையைத் தெளிவாக்க உதவுகிறது. அதுமட்டுமன்றி வைட்டமின் ஏ மற்றும் ஈ ஆகியவற்றை அதிகரிக்க உதவுகிறது. கடல் உணவுகள், மீன் எண்ணெய், கொட்டை உணவுகள், ஆலிவ் எண்ணெய், சீஸ், வெண்ணை மற்றும் முட்டை ஆகியவற்றை தினம்தோறும் ஒரு கிராம் மற்றும் 5 கிராம் எடுத்துக் கொண்டால் இந்த சத்து அதிகரிக்கும்.

மேலும் கண்களைப் பாதுகாக்க உதவும் சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை பச்சையாகவோ அல்லது சமைத்தோ தொடர்ச்சியாக உட்கொண்டு வருவதன் மூலம், ஊட்டச்சத்து குறைபாடுகள் நீங்கி, ஆரோக்கியம் நிறைந்த கண்களுடன் ஒளிமயமான வாழ்க்கையை வாழலாம்.

Categories

Tech |