இந்தியா கிரிக்கெட் அணியில் வீரர்கள் அவர்களுடைய திறமைகளை பொறுத்து தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்திய அணியில் ரவிபிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யஸ்வேந்திர சாகுல், ஜடேஜா, அக்சர் படேல், அஸ்வின் ஆகியோர் சிறந்த பந்துவீச்சாளர்களாக இருக்கின்றனர்.
இவர்களில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு ரவிபிஷ்னோய், யஸ்வேந்திர சாகுல், ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த தொடரை பொருத்துதான் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலகைக்கோப்பை போட்டியில் வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்நிலையில் முன்னாள் தொடக்க வீரரான ஆகாஷ் சோப்ரா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜடேஜா இடம் பெற்றிருந்தாலும், அவரால் கண்டிப்பாக சிறப்பான முறையில் விளையாட முடியாது என்று கூறியுள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைக்கு பிறகு 7 போட்டிகளில் 4 விக்கெட்டுகளை மட்டும் தான் ஜடேஜா எடுத்துள்ளார். இதேபோன்று அஸ்வினாலும் உலக கோப்பையில் சிறப்பாக விளையாட முடியாது. மேலும் 20 ஓவர் போட்டிகளை பொருத்தவரையில் யஸ்வேந்திர சாகுல் மட்டும்தான் பந்து வீச்சில் சிறப்பாக விளையாடக் கூடியவர் என்று கூறியுள்ளார்.