உலக சாம்பியன்ஷிப் பேட்மிட்டன் போட்டி ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீரர் பிரனோய், என்ஜி கா லாங் அங்கஸ் உடன் மோதினார். இந்த போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது என்ஜி கா லாங் அங்கஸ் காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார். இதனால் இந்திய வீரர் பிரனோய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்த போட்டியில் பிரனோய் வெற்றி பெற்றதால் கால் இறுதி சுற்றுக்கு முந்தைய சுற்றில் முன்னாள் உலக சாம்பியன் ஆன சிங்கப்பூர் வீரர் லோ கீன் யூவுடன் மோதுகிறார்.
மேலும் இன்று நடைபெறும் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனைகளான அஸ்வினி மற்றும் ஷியா கௌதம் ஜோடிகள் கொரிய வீராங்கனைகள் லீயுலிம் மற்றும் பேக்ஹாநா ஜோடிகளுடன் மோதுகின்றனர்.