மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவியான கேஷ்னி ராஜேஷ் என்பவர் டெல்லியில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் பளுதூக்கும் போட்டியில் கலந்து கொண்டார். இந்த மாணவி தங்கம் வென்று சாதனை படைத்து மதுரைக்கு திரும்பி வந்துள்ளார். இந்நிலையில் சாதனை படைத்த மாணவிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதுகுறித்து கேஷினி ராஜேஷ் கூறியதாவது, உடல் எடையை குறைப்பதற்காக உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்ற போது தான் இப்படி ஒரு போட்டி இருப்பது எனக்கு தெரிந்தது.
இதனால் சென்னையை சேர்ந்த விக்னேஷ் ஹரிஹரன் என்பவரிடம் பயிற்சி பெற்று நாட்டிற்காக பதக்கம் வெல்ல வேண்டும் என்பதற்காக போட்டியில் கலந்து கொண்டேன். இந்நிலையில் இரு கைகளிலும் சம அளவு 16 கிலோ எடையை பத்து நிமிடம் சைக்கிளிங் வகையில் செய்து காட்டி ஜூனியர் பிரிவில் தங்கம் வென்ற முதல் பெண் என்ற சாதனையை படைத்துள்ளேன். இந்த போட்டி குறித்து அனைத்து பெண்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே எனது நோக்கம் என அவர் கூறினார்.