டென்மார்க்கில் அஸ்டிராஜெனேகா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டென்மார்க் நாட்டில் கொரோனா தடுப்புசியான அஸ்டிராஜெனேகா போட்டுக்கொண்டவருக்கு பக்கவிளைவாக, ரத்தம் உறைதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து, தாய்லாந்து ஆகிய நாடுகள் அத்தடுப்பூசி போடுவதை நிறுத்தி வைத்துள்ளன. இதற்கு முக்கியமான காரணம் டென்மார்க்கில் ,அஸ்டிராஜெனேகா தடுப்பூசியை எடுத்து கொண்ட 60 வயது பெண் உயிரிழந்ததே ஆகும்.
இதுகுறித்து டென்மார்க் மருந்து நிறுவனம் வெளியிட்டுள்ளதாவது , தடுப்பூசி போட்ட பெண்ணிற்கு மிகவும் அசாதாரணமான அறிகுறிகள் இருந்ததாகவும், மேலும் அப்பெண்ணுக்கு சிறு மற்றும் பெருகுழாய்களில் குறைந்த எண்ணிக்கையிலான இரத்தத் பிளேட்டுகள் ,உறைதல் மேலும் இரத்த போக்கு இருந்ததாகவே கூறியுள்ளனர். மேலும் உலக சுகாதார நிறுவனம், அஸ்டிராஜெனேகா தடுப்பூசிக்கும் இரத்த உறைதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளது.