ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 5-ஆம் தேதி உலக சுனாமி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இயற்கை பேரிடர்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் உலக சுனாமி தினத்தை குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமியின் தாய்லாந்து கடற்கரையில் இருந்து தப்பித்த செக் குடியரசை சேர்ந்த பெற்றோ நெம்கோவா என்பவர் இயற்கை பேரிடர் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாள்வது அவசியம் என்று வலியுறுத்தினார். உலகை உலுக்கிய ஜப்பான் சுனாமிக்குப் பிறகு அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் தேவை உண்டானது. இறுதியில் ஆண்டுதோறும் நவம்பர் 5-ம் தேதியை உலக சுனாமி விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்க ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சுனாமி பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அது குறித்த பாதிப்பை பெருமளவில் குறைக்க முடியும் என்பதே இதன் நோக்கம் உலக சுனாமி விழிப்புணர்வு தினத்தில் மக்களிடம் சுனாமி பாதிப்புகள் அது போன்ற அவசர காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் நடத்தப்படுகின்றன.
கடந்த நூறு ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள 58 சுனாமிகளால் இதுவரை பல லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ஒவ்வொரு முறையும் ஏற்பட்ட சுனாமியின் போது சராசரியாக 4 ஆயிரத்து 600 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை டிசம்பர் 26 தான் சுனாமி குறித்து விவாதம் எழுகிறது. ஆனால் உலகம் முழுவதும் நவம்பர் 5 சுனாமி விழிப்புணர்வு நாளாக கடைபிடிக்கப்படுகிறது.