நைரோபியில் தற்போது நடைபெற்று வரும் உலக தடகள U20 சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஆண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டப் பந்தய போட்டியில் இந்திய வீரர் அமித் 42 நிமிடங்கள் 17.94 வினாடிகளில் இலக்கை கடந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக முடிவுற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 7 பதக்கங்களை பெற்று சாதனை படைத்தது.
இதை தொடர்ந்து நைரோபியில் தற்போது Under 20க்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 10,000 மீட்டர் ஓட்ட பந்தய போட்டியில் இந்திய வீரர் அமித் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அதாவது இந்த போட்டியில் 42 நிமிடங்கள் 17.94 வினாடிகளில் இலக்கை அடைந்த வீரர் அமித் பதக்கம் புதிய சாதனை படைத்துள்ளார்.