Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

உலக தண்ணீர் தினம்…. சிக்கனம் அவசியம்…. ஊமையாக நடித்து அசத்திய மாணவர்கள்..!!

இல்லம் தேடி கல்வி மையத்தில் மாணவர்கள் தண்ணீர் சிக்கனம் பற்றி  ஊமையாக  நடித்து காட்டியுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி மருத்துவ காலனியில் தொடக்க, உயர் தொடக்கநிலை இல்லம் தேடி கல்வி மையத்தில் உலக தண்ணீர் தினம், சிட்டுக்குருவி தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பங்கேற்றார்கள். இவ்விழாவில் தண்ணீர் சிக்கனத்தின் தேவையை ஊமை நாடகமாக மாணவ-மாணவிகள் நடித்து காட்டியுள்ளனர்.

இதைதொடர்ந்து தன்னார்வலர் அனுசியா “மரம் நமக்கு வரம்” பற்றி கவிதை உரையாடலை கூறியுள்ளார். இதை அடுத்து சிட்டுக்குருவி அழிவுப் பற்றி நாடகம், இயற்கை அன்னை நடனம், கலை நிகழ்ச்சிகளையும் மாணவ மாணவிகள் பங்கேற்று சிறப்பாக நடத்தியுள்ளனர். இவ்விழாவின் முடிவில் தன்னார்வலர் சாலினி நன்றி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |