Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

உலக தண்ணீர் தினம்…. சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..!!

புதுக்கோட்டையில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை ஒன்றியம்  உள்ளது. இந்த ஒன்றியத்திற்கு உட்பட்ட  துருசு பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. ஊராட்சிமன்றத் தலைவர் நாராயணசாமி தலைமை தாங்கிய  இந்த கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக ஆணையர் காமராஜ், ஒன்றிய பொறியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பங்கேற்றார்கள். உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு இந்தக் கூட்டம் நடத்தப்பட்டதால் குடி நீரின் தூய்மை, குடிநீரை பராமரிப்பது, குடிநீர் சிக்கனம் உட்பட பல்வேறு விவரங்களை குறித்து பேசி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Categories

Tech |