உலகத் தலைவர்களிடம் செப்டம்பர் 21ஆம் தேதி அன்று நடைபெறும் உயர்மட்ட ஐநா கூட்டத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காணொளி மூலம் உரையாற்ற திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் உலக தலைவர்களிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காணொளி மூலம் உரையாற்று அனுமதிக்குமாறு ஐநா பொது சபையில் உக்ரைன் வலியுறுத்தி இருக்கிறது. மேலும் இது தொடர்பான ஒரு முன்மொழிவை 193 உறுப்பினர்களை கொண்ட ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை வெள்ளிக்கிழமை அன்று பரிசளிக்க இருக்கிறது. உக்ரைன் போரின் காரணமாக ஜெலன்ஸ்கி பொது சபை கூட்டங்களில் பங்கேற்க முடியாது என உக்ரைன் விவகாரங்களுக்கு ஐநா குழு கூறியுள்ளது. ஆனால் உக்ரைனால் உருவாக்கப்பட்ட இந்த உத்தேச முன்மொழிவு முடிவின் மீது வாக்கெடுப்பு நடத்த ரஷ்ய அழைப்பு விடுக்கும் என அரசியல் வல்லுனர்கள் எதிர்பார்க்கின்றார்கள். மேலும் இது தொடர்பாக ரஷ்யாவின் ஐநா தூதர் பசிலி நிபஞ்சியா புதன்கிழமை பேசிய போது வீடியோ மூலம் ஜெலன்ஸ்கி பேச அனுமதிப்பதை ரஷ்யா எதிர்க்கிறது என தெரிவித்துள்ளார்.
Categories