பிரதமர் மோடியின் யூடியூப் சேனல் கிட்டத்தட்ட 1 கோடி சப்ஸ்கிரைபர்களை பெற்று புதிய சாதனையை படைத்துள்ளது. இதன் மூலம் பிரதமர் மோடி உலகத் தலைவர்களிலேயே அதிக சப்ஸ்கிரைபர்களை பெற்ற முதல் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் பிரதமர் மோடிக்கு அடுத்தப்படியாக பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா 36 லட்சம் சப்ஸ்கிரைபர்களை பெற்று 2-வது இடத்தில் உள்ளார்.
அதேபோல் 30.7 லட்சம் சப்ஸ்கிரைபர்களை பெற்று மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மேனுவல் லோபஸ் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். கடந்த 2007-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பிரதமர் மோடியின் யூடியூப் சேனலில் இந்தி திரைப்படத்துறையினருடனான கலந்துரையாடல், பிரதமர் மோடி அளித்துள்ள பேட்டிகள் உள்ளிட்ட வீடியோக்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.