Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உலக தாய்ப்பால் வார நிகழ்ச்சி…. கலந்து கொண்ட பாலூட்டும் தாய்மார்கள்…. விழிப்புணர்வு ஏற்படுத்திய செவிலியர்கள்….!!!!

உலக தாய்ப்பால் வார நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது. இதில் குழந்தைகள் நலத்துறை மருத்துவர் பெருமாள் பிள்ளை, துணை கண்காணிப்பாளர் மருத்துவர் ஸ்ரீதரன்,  மருத்துவ அலுவலர் டாக்டர் வெங்கடேஷ், மகப்பேறு பிரிவு துணை தலைவர் அருமைக்கண்ணு, கர்ப்பிணி பெண்கள், குழந்தை பெற்ற தாய்மார்கள் என பலர்  கலந்து கொண்டனர். அதன்பின்னர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் டி.குணசிங் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் தாய்மார்களுக்கு  ஏற்படும் நன்மைகள் குறித்து பேசியுள்ளார்.

இதனையடுத்து கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவினை ரோட்டரி சங்கத்தினர் வழங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து பல  தனியார் மருத்துவமனையை சேர்ந்த செவிலியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இசை, நாடகம் மூலம் தாய்ப்பாலின் நன்மைகளை கூறியுள்ளனர்.  இதில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |