உலக திருக்குறள் மைய கூட்டத்தில் கலந்துகொண்டு பெண்களின் உரிமை குறித்து சிறப்புரை ஆற்றியுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பகுதியில் உலக திருக்குறள் மைய கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது அன்னை சாரதா மகளிர் மன்றம் தலைவி திலகவதி தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் பட்டிமன்ற பேச்சாளர் பூர்ணிமா, இசை ஆசிரியை கீர்த்தனா, பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன், கவுன்சிலர் தேன்மொழி, புஷ்பா, உ.வே.சா பேரவை செயலாளர் சுதா விஸ்வநாதன், ஆசிரியர் ரவிச்சந்திரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் பட்டிமன்ற பேச்சாளர் பூர்ணிமா மற்றும் ஆசிரியை கீர்த்தனா ஆகியோர் திருக்குறளில் பெண்களின் உரிமை மற்றும் கடமை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றியுள்ளனர் .