Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“உலக நன்மைக்காக அரச – வேம்பு மரத்திற்கு திருமணம்”….. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்…!!!!

உலக நலனுக்காக வாய்மேடு அருகே அரச- வேம்பு மரத்திற்கு திருமணம் நடைபெற்றது.

நாகை மாவட்டத்தில் உள்ள வாய்மேடு சிந்தாமணி காட்டில் வேம்படி மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடி திருவிழா நடைபெற்றது. அப்போது உலக நன்மைக்காக கோவில் அருகே இருக்கும் அரச மரத்திற்கும் வேம்பு மரத்திற்கும் திருமணம் நடத்தப்பட்டது.

இதற்காக மரங்களை தண்ணீரால் சுத்தப்படுத்தி அரச மரத்தை ஆணாகவும் வேம்பு மரத்தை பெண்ணாகவும் பாவித்து அபிஷேகங்கள் செய்யப்பட்டு மலர் மாலைகள் சூட்டப்பட்டு பட்டாடைகள் உடுத்தப்பட்டு மங்கல வாத்தியங்கள் முழங்க இனிதே திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். முன்னதாக சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |