உலகின் மிகவும் செல்வாக்கற்ற தலைவராக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தேர்வாகியுள்ளார். இது குறித்து 18 நாடுகளில் நடத்தப்பட்ட பியூ ஆராய்ச்சி மையம் நடத்திய கருத்துக் கணிப்பு ஆய்வின்படி, பலநாடுகளில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மீது பெரும்பான்மையான மக்கள் நம்பிக்கை வெளிப்படுத்தவில்லை. இதில் சராசரியாக 90% மக்கள் உலக விவகாரங்களின் புதின் நடவடிக்கை மேற்கொள்ளகிறார் என்று தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று அவர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் 85% பேர் ரஷ்யாவைப் பற்றி எதிர்மறையான கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் 20 ஆண்டுகளாக, புதின் மீதான மதிப்பீடு பல நாடுகளில் கீழ்நோக்கிய போக்கில் உள்ளது. ஆனால் 2022 இல் உக்ரைன் மீது ரஷ்யா போருக்கு பிறகு, இந்த எண்ணிக்கை மிக குறைந்த அளவை எட்டியிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories