உலக அளவில் கொரோனாவால் இதுவரை 30.36 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது வரை உலக நாடுகளை உலுக்கி வருகிறது. மேலும் உலக அளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
உலக அளவில் இதுவரை கொரோனாவால் 30.36 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் கொரோனா வைரசால் இதுவரை 54.96 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.