வடகொரியா உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை அவ்வப்போது சோதனை செய்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்கா, வடகொரியாவின் ஏவுகணை அமைப்புடன் தொடர்புடைய நான்கு துணை நிறுவனங்கள் மற்றும் வடகொரிய ஆராய்ச்சி நிறுவனம் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறி இந்த ஐந்து நிறுவனங்களும் வடகொரியாவின் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டங்கள் மற்றும் பேரழிவு ஆயுதங்களை ஆதரிப்பதாக கூறி அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.