போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மகாராணிகளின் சிலைகளை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடா நாட்டில் கடந்த மாதம் கம்லூப்ஸ் நகரில் உள்ள பள்ளியில் ஆய்வு நடத்தியபோது சுமார் 215 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டு வருவது பலரையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Demonstrators toppled statues of Queen Victoria and Queen Elizabeth in Winnipeg this afternoon during rallies honouring the children discovered in unmarked graves on the sites of former residential schools over the past month. pic.twitter.com/Zx0aqPGcOW
— APTN News (@APTNNews) July 2, 2021
இந்த நிலையில் கடந்த மாதம் பள்ளியில் இறந்த குழந்தைகளுக்கான அஞ்சலி செலுத்தும் பேரணி நடைபெற்றது. அப்போது நடைபெற்ற பேரணியில் போராட்டக்காரர்கள் சிலர் அங்கிருந்த விக்டோரியா , எலிசபெத் மகாராணிகளின் உருவ சிலைகளை அடித்து உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.