Categories
உலக செய்திகள்

“உலக நாடு முழுவதும் மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா”…. உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…..!!!

உலக நாடு முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் பரவத் தொடங்கியது. இதனால் ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஒவ்வொரு நாடும் படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவித்து வந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் கொரானா வைரஸ் அதிகரித்து வருகிறது. தற்போது ஒரு வார கால கொரோனா வைரஸ் தொற்று நிலவரம் அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டு உள்ளது. அதில் மத்திய கிழக்கு, கிழக்கு, தென்கிழக்கு, ஆசிய அமெரிக்க என எல்லா இடங்களிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் அதிகபட்சமாக 47% தொற்று பரவி உள்ளது. ஐரோப்பாவில், தென்கிழக்கு ஆசியாவில் 32% தொற்றி பாதிப்பும், வடத்தின் அமெரிக்காவில் 14% தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. மேலும் 110 நாடுகளில் ஒமைக்ரன் வைரசால் தூண்டப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனாம் கூறியது, கொரோனா பெருந்தொற்று மாறி வருகிறதை தவிர முடிவுக்கு வரவில்லை. கொரோனாவின் மரபணு பரிமாணத்தை கண்காணிக்கும் திறன் அச்சுறுத்தலில் உள்ளது. ஏனென்றால் பல நாடுகள் கொரோனா தொற்று பாதிப்பு கண்காணிப்பு மற்றும் வரிசைப்படுத்தல் முயற்சிகளை தளர்த்தியது. இது நிலைமையை மேலும் மோசமாக்கி, புதிய மாறுபாடுகள் வரவும் காரணமாக உள்ளது. அதனைதொடர்ந்து உலக அளவில் 120 கோடிக்கு அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. ஆனால் ஏழைகளில் தடுப்பூசிகள் போடும் விகிதம் 13% தான் இருக்கிறது. ஆனால் பணக்கார நாடுகள் 6 மாத குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டு அடுத்த சுற்றுகளுக்கு திட்டமிடுகின்றனர். மேலும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் தடுப்பூசி போடக்கூடாது என்று சொல்வது புரிந்து கொள்ள முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |