Categories
சினிமா தமிழ் சினிமா

உலக நாயகனின் கனவு படம்…. புதிய டெக்னாலஜியில் மருதநாயகம்….. வெளியான லேட்டஸ்ட் அப்டேட்….!!!!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக உலக நாயகன் கமல்ஹாசன் வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று வசூலில் புதிய சாதனை படைத்தது. இந்த படத்தை நடிகர் விக்ரம் தன்னுடைய ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் தான் தயாரித்தார். இவர் தற்போது இளம் நடிகர்களின் படங்களை தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் படங்களை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் நடிகர் கமல் தற்போது நடிப்பை விட தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தில் அதிக கவனம் செலுத்துவதாகவும், அதற்காக தயாரிப்பு நிறுவனத்தை புதுப்பிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து ஆழ்வார்பேட்டை பகுதியில் ஹைடெக் டெக்னாலஜியில் ஒரு தயாரிப்பு நிறுவனம் ரெடியாகிவிட்டது. இதனால் நடிகர் கமல் தயாரிக்கும் அடுத்தடுத்த புதிய படங்களின் அப்டேட் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு நடிகர் விக்ரம் தன்னுடைய கனவு படம் மருதநாயகம் படத்தையும் தற்போது தயாரித்து நடிக்க இருப்பதாகவும் புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால் கமல்ஹாசனுக்கு வயதாகி விட்டதால் மருதநாயகம் படத்தில் அவரால் நடிக்க முடியாது என்று சில தகவல்கள் வெளி வருகிறது. ஆனால் தமிழ் சினிமாவில் இருக்கும் புதிய டெக்னாலஜியால் கமல்ஹாசன் மருதநாயகம் படத்தை தயாரித்து அவரே நடிப்பார் என்று கூறப்படுகிறது. மேலும் நடிகர் கமல்ஹாசன் அறிவித்தால் மட்டுமே மருதநாயகம் படத்தில் உண்மை தன்மை அறிய வரும்.

Categories

Tech |