தமிழ் சினிமாவில் பொய்யை அடிப்படையாக கொண்டு உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் நகைச்சுவையாக எடுக்கப்பட்ட 5 திரைப்படங்கள் பற்றி பார்க்கலாம்.
காதலா காதலா :-
பிரபுதேவா, கமல்ஹாசன் நடிப்பில் வெளியான “காதலா காதலா” திரைப்படத்தில் இருவரும் மாறி மாறி பொய் சொல்லி இருப்பார்கள். இந்த படம் ரசிகர்களை சிரிக்க வைத்ததோடு நல்ல வரவேற்ப்பையும் பெற்றது.
மைக்கேல் மதன காமராஜன் :-
இந்த படத்தில் கமல்ஹாசன் தீயணைப்பு வீரர் ராஜு, சமையல்காரன் காமேஸ்வரன், தொழிலதிபர் மதனகோபால், திருடன் மைக்கேல் என நான்கு வேடங்களில் அற்புதமாக நடித்திருப்பார். இந்த படம் முழுக்க முழுக்க பொய்கள் மட்டுமே நிறைந்திருந்தாலும் சிரிப்புக்கு பஞ்சமில்லாத ஒரு படமாக இந்த படம் அமைந்துள்ளது.
பஞ்சதந்திரம் :-
“பஞ்சதந்திரம்” படத்தில் மேகி என்ற கேரக்டர் இறந்து கிடப்பார். அதில் கமல்ஹாசனும் அவருடைய நண்பர்களும் சோர்ந்து கொலை பழியில் இருந்து மீள்வதற்காக பல பொய்களை சொல்லி இருப்பார்கள். இந்த படமும் முழுக்க முழுக்க ஒரு நகைச்சுவையாகவே எடுக்கப்பட்டுள்ளது.
அவ்வை சண்முகி :-
“அவ்வை சண்முகி” திரைப்படம் கமல்ஹாசன் தன்னுடைய மகளை பார்ப்பதற்காக பெண்ணாக வேடமிட்டு பல பொய்களை சொல்லியிருப்பார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றதோடு திரையரங்குகளில் சிரிப்பலையையும் ஏற்படுத்தியது.
வசூல்ராஜா எம்பிபிஎஸ் :-
“வசூல்ராஜா எம்பிபிஎஸ்” திரைப்படம் பிரகாஷ் ராஜிடம் கமல்ஹாசன் டாக்டர் பட்டத்தை பெறுவதற்கான பல பொய்களை கூறியிருப்பார். இந்த படமும் முழுக்க முழுக்க நகைச்சுவையாகவே எடுக்கப்பட்டுள்ளது.