உலகநாயகன் நடிக்கும் படத்திற்கான வேலைகள் துவங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், பிரபல இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகிறது. கடந்த 2020-ம் ஆண்டு படப்பிடிப்பின் தளத்தில் கிரேன் விழுந்து 3 தொழிலாளர்கள் உயிரிழந்த காரணத்தினால், படப்பிடிப்பு பாதியிலேயே நின்றது. இதனையடுத்து கொரோனா பரவால் காரணமாக இந்தியன் 2 படத்தை தொடங்க முடியாமல் போனது. இந்நிலையில் இயக்குனர் சங்கர் தன்னுடைய அடுத்த படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டதால் லைகா நிறுவனம் இயக்குநர் சங்கர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இந்நிலையில் மீண்டும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் நடிகர் உதயநிதி ஸ்டாலின் தான் என்று கூறப்படுகிறது. ஏனெனில் பொன்னியின் செல்வன் மற்றும் இந்தியன் 2 திரைப்படங்களை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் காரணமாக இந்தியன் 2 படத்திற்கு பட்ஜெட் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இப்படி இருக்க இந்தியன் 2 மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்களின் சாட்டிலைட் உரிமையை உதயநிதி ஸ்டாலின் வாங்கியுள்ளார். இதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து லைகா நிறுவனம் படத்தை இயக்கும் பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளது. மேலும் உலகநாயகன் கமல் நடித்த விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தியன் 2 திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.