உலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி பின்னுக்கு தள்ளப்பட்டு முதலிடத்தை வேறு ஒருவர் பெற்றுள்ளார்.
உலக பணக்காரர்களுக்கான பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதனை bloomberg வெளியிட்டுள்ளது. அதில் வழக்கமாக ரிலையன்ஸின் தலைவரான முகேஷ் அம்பானி முதல் 10 இடங்களில் இடம் பெற்று விடுவார். ஆனால் தற்போது வெளியான இந்த பட்டியலில் முகேஷ் அம்பானி 11வது இடத்திற்கு சென்றுள்ளார். மேலும் இவரின் ஒட்டு மொத்த சொத்துக்களின் மதிப்பு 5.6 3 லட்சம் கோடி என்று தெரியவந்துள்ளது.
இந்த பட்டியலில் முதல் இடத்தில் அமேசான் நிறுவனத்தின் உரிமையாளரான ஜெப் பெசோஸ் உள்ளார். இவரின் மொத்த சொத்துக்களின் மதிப்பு 186 பில்லியன் டாலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் Spaxe x நிறுவனத் தலைவரான எலான் மஸ்க் உள்ளார். இதனைத்தொடர்ந்து 3 மற்றும் 4-வது இடங்களை பில்கேட்ஸ் மற்றும் பெர்னார்ட் அர்னால்ட் பிடித்துள்ளனர். மேலும் 5வது இடத்தை மார்க் ஜூகர்பெர்க் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.