Categories
மாநில செய்திகள்

உலக பாரம்பரிய தினம்…. மாமல்லபுரத்தில் இன்று பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!!

மாமல்லபுரம் புராதன சின்னங்களை பொதுமக்கள் இன்று இலவசமாக கண்டுகளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உலகில் உள்ள பண்டைய காலத்து பாரம்பரியம் மற்றும்  கலாச்சார நினைவுச் சின்னங்களை பாதுகாக்கவும், அடுத்த தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வொரு வருடமும்  ஏப்ரல் 18 ஆம் தேதி உலக பாரம்பரிய தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இன்று உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை போன்ற  புராதன சின்னங்களை இன்று மாலை 6 மணி வரை இலவசமாக கண்டு களிக்கலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது. மேலும் மாமல்லபுரம் கடற்கரை கோவில் பகுதியில், காலை 9:30 மணிக்கு, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், புகைப்பட கண்காட்சியை தொடங்கி, மாமல்லபுரம் சிற்பங்கள் பற்றி  நுாலை வெளியிடுகிறார்.

Categories

Tech |