Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

உலக பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெற்ற தேர்த் திருவிழா….. அன்னதானம் வழங்கிய அமைப்புகள்….!!!

தேரோட்டத்தில் கலந்து கொண்ட  பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்  மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இந்நிலையில்  தேரோட்டத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு டாரஸ் லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தேசிய கோவில்கள் கூட்டமைப்பு சார்பில் அன்னதானம் மற்றும் குடிநீர் வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதேபோல் நேற்று தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தேர் செல்லும் அனைத்து வீதிகளிலும் குடிநீர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் டார்ஸ்  லாரி உரிமையாளர்கள், நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதானத்தை வழங்கியுள்ளனர்.

Categories

Tech |