Categories
தேசிய செய்திகள்

“உலக புலிகள் தினம்”… வனக்காவலனை பாதுகாப்போம்… உறுதியேற்போம்..!!

வளமான காடு மற்றும் வற்றாத ஆறுகள் உருவாகுவதற்கு காடுகளின் வனக் காவலனாக விளங்கும் புலிகளை பாதுகாப்போம் என்று விலங்கியல் பேராசிரியர் விஜயகுமார் கூறியுள்ளார்.

உலக நாடுகள் அனைத்திலும் ஜூலை 29 ஆம் தேதி புலிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. உலக நாடுகளில் ஒப்பிடும்போது இந்தியாவில் மட்டுமே 80 விழுக்காடு புலிகள் இருக்கின்றன. மேலும் 50 விழுக்காடு புலிகள் சரணாலயம் இருக்கின்றது. அழிந்து கொண்டிருக்கும் புலிகளின் எண்ணிக்கையை அறிந்துகொள்வதற்கு நான்கு வருடங்களுக்கு ஒரு முறை புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய நாட்டின் தேசிய விலங்காக இருக்கின்ற புலி 2020ஆம் ஆண்டு 1,700 ஆக இருந்தது. இந்தியாவில் தேசிய விலங்காக போற்றப்படுகின்ற புலிகளை பாதுகாக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு பல வனப்பகுதிகளை புலிகள் காப்பகமாக அறிவித்திருக்கின்றது. தற்போது இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 2,967 ஆக இருக்கின்றது. புலிகளில் சைபீரியன் புலிகள், பெங்கால் புலிகள், தென்சீன புலிகள், ஜாவா புலிகள், சுமத்திரா புலிகள், மலாயன் புலிகள், இந்தோனேசியா புலிகள், பாலி புலிகள் காஸ்பியன் புலிகள் போன்ற 9 வகை புலிகள் உலகம் முழுவதிலும் இருக்கின்றன.

மேலும் தமிழகத்தில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், முதுமலை புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் என்று நான்கு புலிகள் காப்பகங்கள் இருக்கின்றன. சென்ற 2006 ஆம் ஆண்டு தமிழகத்தில் புலிகளின் எண்ணிக்கை 76 ஆக இருந்த நிலையில், தற்போது புலிகளின் எண்ணிக்கை 354 ஆக உயர்ந்திருக்கிறது. இதுபற்றி விலங்கியல் பேராசிரியர் விஜயகுமார் கூறுகையில், “தமிழகத்தில் முக்கிய புலிகள் காப்பகமும் அதிக புலிகள் எண்ணிக்கை கொண்டும் முதுமலை புலிகள் காப்பகத்தில் மட்டும் 162 புலிகள் உள்ளன. மீதமுள்ள 3 புலிகள் காப்பகத்தில் மொத்தமாக 192 புலிகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரிந்துள்ளது. மேலும் நீலகிரி மாவட்டத்தில் இருக்கின்ற 60 விழுக்காடு வனப்பகுதிகளில் 250 க்கும் மேலான புலிகள் இருக்கின்றன.

புலிகளின் எண்ணிக்கை ஆனது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பலமான காடு மற்றும் வற்றாத ஆறுகள் உருவாகுவதற்கு காரணமாக இருப்பது புலிகள் மட்டுமே. காடுகளை ஆக்கிரமிப்பு செய்தல், காடுகளை ஒட்டி வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள விடாமல் தடுத்து காடுகளை பாதுகாத்து அழியும் பட்டியலில் இருக்கின்ற நமது தேசிய விலங்கான புலியை பாதுகாப்பு செய்வதற்கு நாம் அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும். பொதுமக்களிடையே இதுபற்றி புலிகளின் தினமாக கொண்டாடப்படும் இந்த நாளில் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்” என கூறியுள்ளார்.

Categories

Tech |