Categories
அரசியல்

“உலக பெண்கள் சமத்துவ தினம்” எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா….? இதோ சில தகவல்கள்….!!!!

உலக அளவில் பெரும்பாலான நாடுகள் பெண்களுக்கு வாக்குரிமையை வழங்குவதற்கு மறுத்தது. இதனால் பெண்கள் 19-ம் நூற்றாண்டில் வாக்குரிமையை பெறுவதற்காக போராட தொடங்கினர். அமெரிக்க நாட்டில் தேர்தலின் போது யார் யாரெல்லாம் வாக்களிக்கலாம் என்பதை தேர்வுசெய்யும் உரிமை மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 1920-ம் ஆண்டு 19-வது சட்டத் திருத்தபடி அனைத்து மக்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்படும் என சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டம் இயற்றப்பட்ட நாள் தான் அமெரிக்காவில் பெண்கள் சமத்துவ தினமாக கொண்டாடப் படுகிறது. இந்த தினம் பெண்களுக்கான உரிமைகள், போராட்டங்கள் மற்றும் பெண்களின் சாதனைகளை நமக்கு நினைவுபடுத்துகிறது. அதன் பிறகு பெண்கள் அடிமைகளாக இருக்கக் கூடாது என்றால், அவர்களுக்கு கல்வி அறிவு அவசியம். இந்நிலையில் அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை நிறைவேற்றப்பட்டாலும் 19-ம் நூற்றாண்டின் முற்பகுதி வரை அவர்களால் சொத்தில் எந்த ஒரு பங்கையும் பெற முடியாது.

இதனால் பெண்கள் தங்களுக்கு கிடைக்கும் வேலைகளில் ஆண்கள் வாங்கும் சம்பளத்தில் பாதியை வாங்கிக்கொண்டு வேலை செய்தார்கள். அதோடு தங்களுக்கான அரசியல் உரிமைகள், பிரதிநிதித்துவம் போன்றவைகளுக்காகவும் பெண்கள் குரல் கொடுக்க ஆரம்பித்தனர். கடந்த 1990-ம் ஆண்டில் அமெரிக்காவில் இயற்றப்பட்ட பெண்களுக்கான வாக்குரிமை சட்டம் யுனிடெட் கிங்டெம், நியூசிலாந்து, பின்லாந்து போன்ற நாடுகளிலும் இற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் பெண்களுக்கான வாக்குரிமை சட்டம் இயற்றப்பட்டது. முதலாம் உலகப்போரில் பெண்கள் ஆற்றிய பங்கிற்கு பிறகு அவர்களுக்கு பெரும்பாலான உரிமைகள் வழங்கப்பட ஆரம்பித்தது. பெண்களுக்கான உரிமை குழுக்கள் ஐரோப்பிய அரசாங்கத்திற்கு எதிராக போராடியது. இருப்பினும் அமெரிக்காவில் உள்ள பாதி குடி மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள பாதி மாநிலங்கள் பெண்களுக்கான வாக்குரிமை கொடுக்கும் ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு பெண்களுக்கான வாக்குரிமை வழங்கப்பட்டது. இப்படி பெண்களுக்கான வாக்குரிமை உட்பட பல்வேறு உரிமைகள் வழங்கப்பட்டாலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான ஊதிய உயர்வு பிரச்சனைகள் பெண்களின் பொருளாதாரத்தை பெரும் அளவு பாதிக்கிறது. இந்த பாகுபாடுகள் குறைந்தால் மட்டுமே பெண்கள் தங்களுக்கான முழு உரிமையையும் பெற முடியும். கடந்த 1971-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதியை காங்கிரஸ் கட்சி பெண்கள் சமத்துவ தினம் ஆக அறிவித்தது. அதன்படி ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் ஆகஸ்ட் 26-ம் தேதி பெண்கள் சமத்துவ தினமாக கொண்டாடப்படுகிறது.

Categories

Tech |