ஓமிக்ரோன் வைரஸின் பரவல் வேகம் அபாய கட்டத்தை எட்டியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டின் இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகையே உலுக்கியது. இதனை தொடர்ந்து உருமாற்றம் அடைந்த பலவகை கொரோனா வைரஸ்க்கு ஆல்ஃபா ,பீட்டா, காமா மற்றும் டெல்டா என பெயரிடப்பட்டது. இந்தியாவில் கண்டறியப்பட்ட வீரியமிக்க டெல்டா வைரஸ் வேகமாக பரவ தொடங்கியதால் இந்தியாவில் இரண்டாம் அலை உருவானது. இதனையடுத்து பல நாடுகளின் பெருமுயற்சியால் தடுப்பூசி கண்டறியப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த மே மாதம் நிலைமை சற்றே சீரடைந்து வந்தது. இதனிடையே தற்போது புதிதாக உருவாகி மக்களை பீதியில் உறைய வைத்துள்ளது ஓமிக்ரோன்.
பல நாடுகளில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வேகமாக பரவி வருகிறது ஓமிக்ரான் வைரஸ் தொற்று. இந்த ஓமிக்ரான் வைரஸ் தொற்று இந்தியாவில் உருவான டெல்டா வைரசை விட மிக வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் உலக மக்கள் அனைவரும் இந்த ஓமிக்ரான் இதனை எளிதாக எடுத்துக் கொள்ளாமல் மிகவும் நேர்த்தியாக கையாண்டு இதிலிருந்து தப்பித்துக் கொள்ளுமாறு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.