ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி மூன்று மாதங்களில் நடைமுறைக்கு வரும் என்று பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பரவி ஏராளமான உயிர் பலி எடுத்து வரும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டறியும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதற்கான தடுப்பு மருந்தை ரஷ்யா கண்டுபிடித்து விட்டதாக கூறியது. சீனாவும் இந்தியாவும் தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். உலக நாடுகளுக்கு தொற்றை பரப்பிய குற்றச்சாட்டிலிருந்து சீனா விலக தடுப்பு மருந்தை கண்டறிய தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. சீனாவில் உள்ள மூன்று நிறுவனங்கள் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட சோதனைக்கு தயாராகி உள்ளன. உலக நாடுகள் தயார்செய்யும் தடுப்பு மருந்துகளை உலக சுகாதார நிறுவனம் பரிசோதனை செய்து வருகிறது.
இதனிடையே கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தை மூன்று மாதங்களில் கண்டறிந்து விடுவோம் என்று பிரிட்டன் அரசு உறுதியாக தெரிவித்து இருந்தது . இதனால் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் மும்முரமாக அதற்கான வேலையில் இறங்கியுள்ளனர். அவர்கள் கண்டறிந்த தடுப்பு மருந்துக்கு ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் 2021 ஆம் ஆண்டு இந்த மருந்து மக்களுக்கு கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதோடு பெரிய அளவில் பேசப்படும் ஆஸ்ரா செனேகா தடுப்பு மருந்து பிரிட்டனில் சோதனைக்கு உட்படுத்தப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.